ராமநாதபுரம்,நவ.30:-
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் மஹாலில் திமுக வடக்கு நகர் பாகமுகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் நகர் செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மருத்துவர் சுதர்சன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்,ராமநாதபுரம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் நகர் 20-வது வார்டு செயலாளர்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி,மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பழ.பிரதீப்,22-வது வார்டு செயலாளர் கண்ணன்,27-வது வார்டு செயலாளர் முனியாண்டி,கவுன்சிலர் மஞ்சுளா உட்பட வடக்கு நகர் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.