பாம்பன் போலீஸ் உதவி மையத்திற்குள் மழை நீர்

ராமநாதபுரம்,நவ.3:-

ராமேசுவரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மழைநீர் புகுந்தது.

பழமையான பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு உரிய நேரத்தில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் மக்கள் பாதித்தனர். இதனை தவிர்க்கவும், பாலத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டி பாலம் நடுவில் இரு இடத்தில் போலீசார் உதவி மையம் அமைத்தனர். இங்கு இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை நிறுத்தாதபடி அப்புறப்படுத்தினர்.

இங்கு பணிபுரியும் போலீசார் வெயில், மழையில் உதவி மையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுப்பர். இந்நிலையில் உதவி மையத்தின் கூரை சேதமடைந்த நிலையில் அதனை சரி செய்ய போலீசார் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் நேற்று பெய்த மழையால் உதவி மையம் கூரை வழியாக மழைநீர் புகுந்தது. இதனால் காவலர்கள் உதவி மையத்திற்குள் நிற்க முடியாமலும், அலைபேசி, உடமைகளை பாதுகாக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *