ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மெத்தாபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் அதனை காரில் கடத்திய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி காரில் போதைப்பொருள் கடத்துவதாக க்யூ பிரிவு போலீசார்,கீழக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே கீழக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சல்மோன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்ற போது நிற்காமல் கீழக்கரை நகர் பகுதிக்குள் சென்று போக்குவரத்து நெருக்கடிக்குள் சிக்கி கொண்டது.பின் தொடர்ந்து சென்ற போலீசார் காரில் இருந்த கீழக்கரையை சேர்ந்த ஜெயினுல் ஆபிதீன்,சதாம் உசேன், சையது முகம்மது,ஆகிய மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு 4 கிராம் மெத்தாபெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றி காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூவரையும் கைது செய் போலீசார் குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.