சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பி.ஆர்.பாபு தலைமையில்,கௌரவத் தலைவர் கபிலர்,துணைத் தலைவர் இளங்கோவன்,துணைச் செயலாளர்கள் ராஜா,வெள்ளைச்சாமி, நகர் செயலாளர் கணேச மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பிரசித்தி பெற்ற வழி விடு முருகன் ஆலயத்தில் ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் எம்.எஸ்.ஆர்.கணேசன், மணிகண்டன்,.காளிதாஸ்,சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.