ராமநாதபுரம்,டிச.7:-
ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள பா.ம.க திருவாடானை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சட்டமேதை பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு நாள் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையில்,திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் முனியசாமி ஏற்பாட்டில் அனுசரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலா முன்னிலை வகித்தார்.முன்னாள் மாவட்ட செயலாளர்,மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான்,கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் சட்டமேதை அம்பேத்கர் வழியில் “சமூக நீதியை வென்றெடுக்க சபதம் ஏற்போம்” எனும் தலைப்பில் பேசினர்.முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இபுராஹிம் நன்றி கூறினார்.