இராமநாதபுரம்,அக்.16:-
இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் கி.தனபாலன் தலைமையில் ஜனார்தனன் மாளிகையில் நடைபெற்றது.
செயலாளர் கே.கே.குமார் முன்னிலை வகித்தார்.பொருளாளர் பா.மகேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.கூட்டம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் முதலாவதாக மறைந்த மூத்த பத்திரிகையாளர்கள் மாலைமலர் நாளிதழின் மாவட்ட செய்தியாளர் எஸ்.ஜே.தாஹிர் உசேன்,தினபூமி நாளிதழ் அதிபர் மணிமாறன்,முரசொலி செல்வம் மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோருக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தி அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கப்பட்டது.பின்னர் இக்கூட்டத்தில் சங்க வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியின் நிறைவாக துணைத்தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.இணைச் செயலாளர் பாலிமர் டிவி பிரபு ராவ்,ஜெயா டிவி ரகு,சன் டிவி சரவணன்,ராஜ் டிவி செழியன்,தினபூமி ரமேஷ்,நியூஸ் ஜெலிங்கேஸ்வரன்,நமது அம்மா ராமநாதன்,தினகரன் பரமேஸ்வரன்,நியூஸ் 18 தமிழ்நாடு டிவி வீரக்குமரன்,ஜெம் டிவி ரத்தினக்குமார்,மக்கள் குரல் ராமு,இமயம் டிவி ரபீக், உட்பட ஏராளமான சங்க உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.