ராமநாதபுரம்,நவ.30:-
ராமநாதபுரம் நகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் வடக்கு நகர் தி.மு.க இளைஞரணி பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நகர் செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் சம்பத்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ் கண்ணா முன்னிலை வகித்தார்.
மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பழ.பிரதீப் அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்கு இளைஞரணியினர் கடுமையாக களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசப்பட்டது.முடிவில் ராமநாதபுரம் 20-வது வார்டு செயலாளர்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி நன்றி கூறினார்.