தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-
ஒன்றிய அரசில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கடந்த வாரம் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருப்பதால், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவரும், ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் இன்று 24.10.24 மிண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு எங்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு கிடைத்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜுலை அரையாண்டிற்கான 3% அகவிலைப்படியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். ஏன் என்றால், ஜுலை,ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவைத்தொகையை அக்டோபர் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிது.
தமிழக அரசு அறிவித்துள்ள 3% அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்றோர் பயனடைய உள்ளனர்.மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு, ஊக்க ஊதிய உயர்வு போன்றவற்றை வழங்க வேண்டும் சந்திப்பின் போது முதலமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். குறிப்பாக பழைய ஓய்வூதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.
ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.