வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரெயிலில் கடத்தி வந்த ரூ .25 லட்சம் போதைமாத்திரைகள்பறிமுதல் . ரெயில்வே ஊழியர் உட்பட 7 பேர் கைது. கோவை நவ 9 கோவை மாநகர பகுதியில் போதை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார்ஆகியோர் மேற் பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் நடமாட்டதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை யினர்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போத்தனூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பல் என்பது தெரியவந்தது. போலீசார் அந்த 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் போத்தனூரை சேர்ந்த கேசவன் ( வயது 25) சரண்ராஜ் ( வயது 26) அஜித்குமார் ( வயது 25 )தினேஷ் ( வயது 26) முகமது ஹசன் ( வயது 24 ) என்பது தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து போதை மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது ?என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது .அதில் ராஜஸ்தானில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ரயிலில் ஒருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒருவரும் உதவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரண நடத்தி ராஜஸ்தானைசேர்ந்த பப்புராம் (வயது 25) அரியானாவை சேர்ந்த ( வயது 21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கும்..இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராஜஸ்தானை சேர்ந்த பப்புரம் 15 ஆண்டாக கோவையில் வசித்து வருகிறார். அவர் ராஜஸ்தானில் உள்ள நபர்களிடமிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி ரெயிலில் ஏ.சி. கோச் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார் .இதற்கு ரெயில்வே ஒப்பந்த ஊழியரான சிக்கந்தர் என்பவர் உதவி உள்ளார் .மேலும் சிக்கந்தர் போதை மாத்திரைகளை ரெயிலில் மறைத்து வைத்து கடத்தி வந்து கோவையில் இருக்கும் பப்புராமிடம் கொடுத்து விடுவார். அவர் கோவையில் மற்ற நபர்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். டாக்டர் கொடுத்ததாக போலீ ரசீதுகளை தயார் செய்து ராஜஸ்தானில் உள்ள மருந்து கடைகளில் கொடுத்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி கோவைக்கு கடத்தி வந்துள்ளனர். அங்கு ஒரு மாத்திரை ரூ 60க்கு வாங்கி கோவையில் ரூ. 300க்கு மேல் விற்பனை செய்துள்ளனர் அந்த மாத்திரையை வாங்குபவர்கள் அதை தண்ணீரில் கரைத்து ” சிரஞ்ச்” மூலம் ஏற்றி போதைக்கு பயன்படுத்தி உள்ளனர். தற்போது இந்த வழக்கில் ராஜேஷ்தானை சேர்ந்த ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார்.அவரையும் விரைவில் பிடித்து விடுவோம் .தற்போது சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் சைபர் குற்றவாளிகளிடம் பணம் இழந்தவர்கள் புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு தற்போது வரை ரூ.93 கோடி அளவுக்கு மோசடி புகார்கள் வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடியை திரும்ப கொடுத்து இருக்கிறோம். ரூ. 50 கோடியை வங்கி மூலம் முடக்கி வைத்துள்ளோம் .மீதி பணத்தை நீதிமன்றம் மூலம் இழந்தவர்களுக்கு கொடுத்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை கமிஷனர்கள் சரவணகுமார், சுகாசினி ஆகியோர் உடன் இருந்தனர்.