நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆணையின்படி,ஏழை,எளிய மணப்பெண்களுக்கு சீர்வரிசை செய்யும் பணிகள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்டச் செயலாளர் குகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தலைதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் பிரேமலதா தம்பதியரின் மகள் லாவண்யா திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தந்தை ஆனந்தன் ஏற்கனவே காலமாகிவிட்டார்.மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்தனர்.ஊர் மக்கள் ஒன்று கூடி நாடார் மகாஜன சங்கம் மாவட்ட செயலாளர் குகனை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.உடனே அவரது ஏற்பாட்டில் சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் ஊர் பெரியவர்கள் மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க மாவட்டசெயலாளர் குகன், மாவட்ட மகளிர் அணி தலைவி பாப்பா, மாநில குழு உறுப்பினர் முத்துப்பேட்டை உதயமூர்த்தி, ராமநாதபுரம் எஸ் ஆர் தாய் கடலைக் கடை உரிமையாளர் மாரியப்பன், மதுரை எஸ்.வி.என் கல்லூரி செயற்குழு உறுப்பினர் முருகேசன்,வெள்ளரி ஓடை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், தாமரைக்குளம் ஐடிஐ நிர்வாகி சோமா சிவலிங்கம்குஞ்சார் வலசை நாடார் உறவின் முறைச் செயலாளர் ஜெயக்குமார்,திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கா.மருதுபாண்டி,நாடார் மகாஜன சங்கம் மண்டபம் ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் தலைத்தோப்பு நாடார் உறவின்முறை தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாகிகள் கருப்பையா,நாகராஜ், மகளிர் மன்ற தலைவிகள் காளியம்மாள், சுதா மதி,பஞ்சவர்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிராம பொதுமக்கள் சார்பில் நாடார் மகாஜன சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.