இராமநாதபுரம்,அக்.20:-
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்கியதை தொடர்ந்து தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ முதல்வர்,துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை,இதய நோய்,எலும்பு முறிவு,நரம்பியல், ,மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் என பல்வேறு பிரிவில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அழைத்து வருகின்றார்கள்.தலையில் ஏற்படும் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்திட அனுபவமுள்ள மருத்துவர்கள் தேவை என்பதை சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்,மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர்களின் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு என டாக்டர் பரணிதரன் என்ற சிறப்பு நிபுணரை நியமித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் இளையான்குடி அருகே ஆளி மதுரை கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா மகன் தனசேகரன் இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயல் இறுதி ஆண்டு மாணவர்.இவருக்கு ஏற்பட்ட தலை காயத்தை மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். இனிமேல் தலையில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்திட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.