ராமநாதபுரம்,அக்.21:-
சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஜயக்குமார் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருகின்ற 24.10.24 அன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தமிழக முழுவதும் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தால் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கெடுக்கும் விதத்தில் நடைபெற உள்ளது.அதனை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.இதில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை,பத்திரப்பதிவுத்துறை, பொதுப்பணித்துறை,கல்வித்துறை, கருவூலத்துறை மற்றும் ஆசிரியர்கள் பங்கெடுக்க உள்ளனர்.எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி நமது வாழ்வாதார பிரச்சனையை கருத்தில் கொண்டு நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.