கீழக்கரையில் மீலாது நபி பெருவிழா!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து ஜமாஅத்துக்கள், சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்று நடத்திய உத்தம திருநபி (ஸல்.) அவர்களின் உதய தின மீலாது விழா 21.10.2024, திங்கட்கிழமை அன்று நடுத்தெரு பெரிய ஜூம்ஆ மஸ்ஜித் பின்புறம் கீழக்கரை டவுன் காஜியும் கீழக்கரை, திருப்புல்லாணி வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவரும் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவரும் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில ஆலோசகருமான மௌலவி முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தலைமையில் நடைபெற்றது.

கீழக்கரை அனைத்து ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஹாஃபிழ் இப்ராஹிம் ரசின் கிராஅத் ஓதினார். இ.யூ.மு. லீக் மாநில இளைஞர் அணி செயலாளர் N.நெய்னா முகம்மது தமிழாக்கம் செய்தார்.

இ.யூ.முஸ்லிம் லீக் நகர் தலைவரும் ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளருமான அல்ஹாஜ் சேகு ஜமாலுதீன் வரவேற்றார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ஜனாப். கே.நவாஸ் கனி அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவரும் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொருளாளருமான அல்ஹாஜ். ஷாஜஹான் அவர்கள், நான்காம் தமிழ்ச்சங்க தலைவரும் இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி செயலாளருமான மன்னர் திரு. நாகேந்திர சேதுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி ஹாஃபிழ் ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.

இ.யூ.மு. லீக் நகர் துணை செயலாளர் பௌசுல் அமீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நகர் கொ.ப. செயலாளர் லெப்பை தம்பி இஸ்லாமிய கீதம் பாடினார். நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கீழக்கரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் K.அஹமது குதுபுதீன் ராஜா
நகர் பொருளாளர்,
S.சபிக் துணைத்தலைவர், TMS ஹாஜா முஹையதீன் ஒருங்கிணைப்பாளர், JSM ஹசன் துணைச்செயலாளர், சேகு ஜலாலுதீன் வர்த்தக அணி தலைவர், சாகுல் ஹமீது வர்த்தக அணி செயலாளர், அப்துஸ்ஸலாம், அஹமது சுபைர் நகர் நிர்வாக உறுப்பினர்,
ஆப்பிள் பாபு நகர் ஆலோசகர், கமருசமான் , முஸ்தபல் அமீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் நிர்வாகிகள்
மற்றும் இளைஞர் அணி தலைவர் S அஹமது கல்வத்தி, செயலாளர் இல்யாஸ், துணைத்தலைவர், கலீல் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை துபை மண்டல அமைப்பாளர் M.I முஹம்மது காமில் ,MES அப்தாஹிர் ஃபைஜி துணைதலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை துபை. மற்றும் நகர் உறுப்பினர்கள் தொண்டர் பணி வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வில் அதிக அளவில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டார்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பைத்துல் மால் நிர்வாகிகள், அனைத்து சங்க நிர்வாகிகள், மதரஸா பள்ளி ஆலிம்கள், காவல்துறை, ஊடக நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள். மற்றும் அனைத்து ஜமாஅத்களின் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் திரளாக கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மத்ரஸா மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *