மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிரட்டும் தொணியில் அவதூறு பேசி வரும் பாஜக பொறுப்புக்குழு தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிரட்டும் தொனியில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பேசிய தமிழ்நாடு பாஜக பொறுப்புக்குழு தலைவர் எச்.ராஜா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் பொறுப்புக் குழு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமையில்,ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அன்புச் செழியன் மற்றும் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் இன்று ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அவதூறு பேசியதற்கான பல்வேறு ஆதாரங்களுடன் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர், இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.