பனைக்குளம்,ஆக.6:-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் துணைப்புலம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஐ எம் எஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியை ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்.நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 25 அணிகள் கலந்து கொண்டது.இறுதியில் இருமேனி-கீழக்கரை அணி மோதியத.முடிவில் இருமேனி அணி வென்றது.
இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வஹாப் தலைமை தாங்கினார்.ஊரணி பள்ளிவாசல் இமாம் அப்பா அலி ஆலிம் கிரா அத் ஓதினார். விளையாட்டு கமிட்டி செயலாளர் அன்வர் அலி வரவேற்றார்.வெற்றி பெற்ற அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்பட்டது.2-வது இடம் பெற்ற கீழக்கரை அணிக்கு 11 ஆயிரம் 3-வது இடம் பற்ற ராமநாதபுரம் சேதுபதி அணிக்கு 8 ஆயிரம்,4-வது இடம் பிடித்த புதுமடம் மணிக்கு 5 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் அம்சத் அலி, பரிபாலன சபை செயலாளர் தௌலத் பாக்கிர்,நிர்வாக சபை செயலாளர் கரீம் கனி,பனைக்குளம் மேற்கு ஜமாத் மூத்த நிர்வாகி உமர்கான்,கால்பந்து போட்டி கமிட்டி தலைவர் பலீல் அஹமது,ஊராட்சி மன்ற தலைவர் பௌசியா பானு,ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் ஏசியன் சாகுல் ஹமீது, செயலாளர் ஏ.ஏ குயிக் மணி ஆசிக் கனி,சமூக சேவகர்கள் லாபீர் ஹசன்,பகுருதீன்,ரோட்டராக்ட் மாவட்ட தலைவரும்,கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் கன்வீனருமான பொறியாளர் டாக்டர் சுல்தான் சம்சுல் கபீர்,மாஸ் சேக் உதுமான் மற்றும் பலர் பங்கேற்றனர் முடிவில் செயலாளர் ஆசிக் கனி நன்றி கூறினார்.