ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் கிழக்கு கடற்கரை சாலையில் யு.டி.ஏ டிரேடர்ஸின் மற்றொரு அத்தியாயமான இந்தோ ஃபார்ம் டிராக்டர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஷோரூமை விற்பனை பிரிவு உதவி தலைவர் எஸ்.ரமேஷ் திறந்து வைத்தார்.விற்பனை பிரிவின் பிராந்திய மேலாளர் கே.ஆர்.தாமோதரன்,பிரதேச மேலாளர் கே.குணசேகரன்,முதுநிலை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.உமர் பாரூக்,கரீம் ஹக் சாஹிப்,முஹம்மது தாரிக், முஹம்மது அஸ்லம், இம்ரான் அஸ்லம் உட்பட இந்தோ ஃபார்ம் யூகிப்மெண்ட் லிமிடெட் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.