தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை இயற்றி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மைகளை உரக்க சொல்லும் பத்திரிக்கை துறை செழிக்க அவர் வாழ்த்தியுள்ளார்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ம் நாள் தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியாளர்களையும் சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது பத்திரிக்கை ஊடகம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தில் உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.உண்மைக்கான பயணத்தில் அவர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். சகிப்புத்தன்மையற்ற சகாப்தத்தில் பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது.அச்சம்,சார்பு இன்றி பத்திரிக்கை துறை செயல்பட வேண்டும்.நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களை பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.