தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் படி தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பி.வி.எம் மனநலக்காப்பகத்தில் தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக கீழக்கரை நகர் இளைஞர் அணி அமைப்பாளர்,பொதுக்குழு உறுப்பினர்,நகர்மன்ற துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.எம்.அருளானந்து,மணிமுத்தரசி,சிவசுப்பிரமணியன்,பூமிநாதன்,மனோகரன், முருகன்,அருள்பால்ராஜ்,தண்டபாணி ஆகியோர் ஏற்பாட்டில் மதிய உணவு மற்றும் குளிர்கால போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் சாயல்குடி ராமர்,தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் தொழிலதிபர் முஹம்மது ஹனிபா,துணை அமைப்பாளர் கார்த்திகேயன்,கீழக்கரை நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் பயாஸ்,முஹம்மது நயீம் ஹக்தர்,முஹம்மது சுபியான் உட்பட தி.மு.க நகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.