ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம்,மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார் ராமநாதபுரம் பகுதி மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதி,மண்டபம்,பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டதுடன் பொதுமக்கள் தங்கியுள்ள முகாமில் பார்வையிட்டு அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் ஊராட்சி,மொட்டப்பனை பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் தேங்கிருப்பதை பார்வையிட்டு இப்பகுதியில் கூடுதலாக மோட்டார்கள் வைத்து மழை தண்ணீரை விரைவாக அப்புறப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச் செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங்,உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான்,ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் கண்ணன்,ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ராமேஸ்வரம் வட்டாட்சியர்கள் ஜபார்,செல்லப்பா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.