ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்ஏ உத்தரவின் படி ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர்,நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 10.30 மணியளவில் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து,பழைய பேருந்து நிலையத்தில் தி.மு.க கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி,அத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கும்,ஆதரவற்றோருக்கும் மதிய உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.நிகழ்வில் தி.மு.க நகர் செயலாளர் நிர்வாகிகள்,வார்டு செயலாளர் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள்,BLA 2 நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு வடக்கு நகர் தி.மு.க செயலாளர் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.