ராமநாதபுரம்,நவ.25:-
ராமநாதபுரம் நேஷனல் அகாடமி குடும்பத்தின் சார்பாக 30 வருடங்களாக சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு செயல்திட்டங்களை செய்து வருகின்றனர். சிட்டுவேஷன் இவருடன் புற்றுநோய் பற்றியும் மாபெரும் கண்காட்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஹனுமந்த் ராவ் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில் புற்றுநோய் தோற்றம் முதல் எவ்வாறு பரவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றினை 10 அறைகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஹனுமந்த் ராவின் கருத்துரைகளினால் இந்த கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டது.