எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லா கட்டும் நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் தலைமையில் அண்ணா சாலை அருகில் உள்ள ஜெகன் திரையரங்கம் முற்றுகை நடைபெற்றது.
முற்றுகை போராட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் கண்டன கோஷம் எழுப்பினார்.மேலும் முற்றுகை போராட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் மாவட்ட செயலாளர்கள் நஜ்முதீன்,ஆசாத் இராமநாதபுரம் நகரத் தலைவர் ஹக்கீம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொகுதி நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் சிறப்பாக செய்திருந்தார்.