ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியை நேரில் பார்வையிட்டு மருத்துவ பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் அரசு மாதிரி பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவ,மாணவியர் 86-பேர் உயர் கல்வி வழிகாட்டல் திட்டம் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியை நேரில் பார்வையிட்டனர்.மருத்துவக் கல்லூரி டீன் அமுதா ராணி உத்தரவின்படி கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவ,மாணவியருக்கு கல்லூரியின் பல்வேறு துறைகளையும் அதன் செயல்பாடுகளையும் விளக்கினர். மாணவ,மாணவியரின் பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.இது குறித்து மாணவ,மாணவியர் கூறுகையில், இந்த நிகழ்வு மூலம் மருத்துவராகும் எண்ணம் எங்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றனர்.