சாயல்குடியில் துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்-கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முஹைதீன் அறிக்கை!!!

ராமநாதபுரம்,நவ.19:-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெறுகிறது.

இது குறித்து சாயல்குடி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர்‌ குலாம் முஹைதீன் “பனைக்குளம் நியூஸ்” இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நவம்பர் 27-ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இருவேலி-அருப்புக்கோட்டை சாலையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வை தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவரும்,பால்வளம் மற்றும் கதர் கிராம தொழில்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைக்க உள்ளனர்.தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி,மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் சுப.த.திவாகரன்,மாநில விவசாய அணி துணை செயலாளரும்,முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான‌ முருகவேல்,மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் போஸ்,மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் இராமர்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர்‌ இன்பா A.N.ரகு,பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ்,சாயல்குடி பேரூர் தி.மு.க செயலாளர்  வெங்கடேஷ்,சாயல்குடி நகர் இளைஞரணி விக்னேஷ் ராம்,விருதுநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளரும்,முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளருமான வேல்முருகன்,தி.மு.க மருத்துவரணி மாநில துணைச் செயலாளரும்,மதுரை மேற்கு தொகுதி பார்வையாளருமான மருத்துவர் திலீப் ராஜ கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.நடுமாடு போக,வர 8 மைல் தூரம் என நுழைவுக்கட்டணமாக ரூபாய் 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முதல் பரிசு ரூபாய் 30,047,இரண்டாம் பரிசு 20,047,மூன்றாம் பரிசு 15,047,நான்காம் பரிசு 10,047 வழங்கப்பட உள்ளது.முதல்பரிசினை மாரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணியம்மாள் சண்முகவேல்,இரண்டாம் பரிசை இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி,மூன்றாம் பரிசை எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டித்தேவர்,நான்காம் பரிசை நீர்ப்பாசன சங்கத்தலைவர் இராஜாராம் ஆகியோர் வழங்க உள்ளனர்.இதேபோல் சாயல்குடி கிழக்கு ஒன்றிய திமுக வர்த்தக அணி சார்பில் நடைபெறும் மாட்டுவண்டி பந்தய போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 7000-மும்,இரண்டாம் பரிசாக ரூபாய் 7000 மற்றும் ரூபாய் 5000-மும்,மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000-மும்,நான்காம் பரிசாக ரூபாய் 3000 மற்றும் ரூபாய் 2000-மும் வழங்கப்பட உள்ளது.இந்த பரிசுகளை திமுக சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முஹைதீன், திமுக மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்,கமுதி ஸ்ரீ விநாயகா மருத்துவமனை மருத்துவர் கணேசன், கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அய்லுக் சண்முகம், சாயல்குடி மர்ஜான் சில்க்ஸ்&ரெடிமேட்ஸ் உரிமையாளர் சித்திக் ஆகியோர் வழங்க உள்ளனர்.அன்று மாலை 4.30 மணிக்கு சின்னமாடு,பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெறும்.இந்த மாட்டுவண்டி பந்தய போட்டிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய‌ தி.மு.க நிர்வாகிகள் வில்லியம் சார்லஸ்,பாலகிருஷ்ணன்,ஜலீல்,பொன்னுத்தாய் பாண்டி,பழனிச்சாமி,அமீர் அம்சா,ஜெயபாலன்,முனியசாமி,இராஜாராம்,அனிபா அண்ணா ஆகியோர் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *