ராமநாதபுரம்,நவ.23:-
ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா (என்எஸ்சிபிஏவி) உண்டு உறைவிடப்பள்ளியை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குனர் வைகுமார் தலைமையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சின்னராசு,மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ்,மாவட்ட உதவிதிட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திலகர்ராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வில் பள்ளியின் நிர்வாகி டாக்டர்.ச. மாடசாமியிடம் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன்கள் பற்றி கேட்டறிந்தார்.பின்பு அனைத்து அதிகாரிகளும் சமையல் அறைக்குள் நுழைந்து கடையில் வாங்கப்பட்ட உணவுப்பொருட்களை எடுத்து உற்பத்தி காலாவதி தேதிகளை ஆய்வுசெய்தனர்.பின்பு மதிய உணவுக்காக சமையல் செய்யப்பட்ட உணவுகளையும் ஆய்வு செய்தனர்.காலையில் சமைத்து மாதிரிக்கு வைக்கப்பட்ட உணவையும் ஆய்வு செய்தனர்.முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் கணக்கரிடம் பெற்று ஆய்வுசெய்தார்.இணை இயக்குனர் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் உணவு,தங்குமிடம்,வசதி பற்றி கேட்டறிந்தார்.மாணவர்கள் எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மனத்திருப்தியாக வழங்கப்படுகிறது என்று பதில் அளித்தனர்.பின்பு ஒரு மாணவரிடம் கற்றல் திறன்,வாசிப்புத்திறன் பற்றிஆங்கில வார்த்தையில் கேட்டறிந்தனர்.அந்த மாணவன் ஆங்கில எழுத்துக்களில்தெளிவாக கூறினார்.பின்பு இயக்குநர் நீங்கள் படித்துவிட்டு என்ன வேலைக்கு செல்வீர்கள் என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டார்.அதற்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் ராணுவம் மற்றும் போலீஸ் வேலைக்கு செல்வோம் என்று பதில் வழங்கினர்.உடனே இயக்குனர் பள்ளி நிர்வாகியை அழைத்து அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய அனைத்தும் முறையாக வழங்க வேண்டும்.எந்த தவறுதலுக்கும் இடமளிக்காமல் பள்ளியை நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.