ராமநாதபுரம் நவ.18:-
தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,தி.மு.க இளைஞரணி செயலாளர்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,தி.மு.க மாவட்ட செயலாளர்,காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி மண்டபம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இளைஞரணி பாகமுகவர்கள் ( BLA 2 ) ஆலோசனை கூட்டம் இன்று 18/11/2024 மாலை நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே.பிரவின் தலைமையில்,மாவட்ட இளைஞரணி செயலாளர் சம்பத்ராஜா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத் மற்றும் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் இளைஞரணி பாகமுகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.