இராமநாதபுரம்,நவ.16:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கு கூடுதலாக 10 நாட்கள் தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தர்மர் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் மழையின்றி நெற்பயிர்கள் முளைக்கும் பருவத்தில் கருகி வருகிறது. இந்நிலையில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நேற்று முன்தினம் (நவ.15) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் காப்பீடு செய்ய செல்லும் நிலையில் கிராமங்களில் இன்டர்நெட் சேவை குறைபாடு, வி.ஏ.ஓ.,க்கள் இல்லாத நிலை உட்பட பல்வேறு பிரச்சினைகளால் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
தர்மர் எம்.பி., கூறுகையில், விவசாயிகள் பலர் இன்னும் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்யாத நிலை உள்ளது.ஆகவே அரசும்,மாவட்ட நிர்வாகமும் பத்து நாட்கள் வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கி தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.