இராமநாதபுரம்,நவ.16:-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோவங்கி) கிளையில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7% சதவீத வட்டியில் ரூபாய் 20 இலட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது.
கடன் பெற தகுதிகள்:-
1.இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், 3.தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள், 4.பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம். 5.இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம். இராமநாதபுரம் 623501 மற்றும் கிளை மேலாளர், தாய்கோவங்கி, எண்.102/அவ்வையார் வீதி, இராமநாதபுரம் 623501 (தொடர்பு எண்: 8925814634) மற்றும் 04564-220678 தொடர்பு கொண்டு கடன் உதவி திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.