ராமநாதபுரம்,நவ.21:-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த விளம்பர ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை நடைபெறவுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு வாகனம் நகர்ப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. மேலும் ஆரோக்கியமான நவீன வாசக்டமி சிகிச்சை செய்து கொள்ள வரும் நபர்களுக்கு ரூ.1100/- ஊக்கத்தொகை வழங்குவதுடன், உதவிக்கு வருபவர்களுக்கு ரூ.200/- ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் இச்சிகிச்சையானது எளிய முறையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் எந்த வகையிலும் பக்க விளைவுகள் உண்டாகாது. இந்த வாசக்டமி சிகிச்சை ஆண்களுக்கான உறுதியாகப் பயனளிக்கும் பாதுகாப்பான கருத்தடை முறையாகும். அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று, அவதிப்படுவதைவிட பிறந்ததை காப்பாற்றி இனி பிறப்பதை தவிர்த்து,அளவான குடும்பம் அமைத்து ஆனந்தமாய் வாழ தந்தையர்கள் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம் 6T601 சுகாதாராத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குநர் பிரகலாதன்,துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.சிவானந்தவள்ளி,துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அர்ஜுன் குமார்,மாவட்ட விரிவாக்க கல்வியாளர் முனைவர்.திலீப் குமார், குடும்ப நலத்துறை கண்காணிப்பு அலுவலர்கள் சாகுல்ஹமீது, ஆரோக்கியராஜா,டேவிட் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.