ராமநாதபுரத்தில் சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மலையரசு,செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் டாக்டர் கிருபாகரன்,இந்தியன் மருத்துவர் சங்கம் மாவட்ட தலைவர் அரவிந்த் ராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாகடர்சின்னத்துரை அப்துல்லா, டாக்டர் கலீல்ரகுமான்,மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள்,மாணவர்கள் முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் ஆர்.மலையரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசு மருந்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம்.ஆனால் பணியில் இருக்க வேண்டியது 21 ஆயிரம் மருத்துவர்கள்.மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும்.மருத்துவர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.