தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வண்ணமாக ராமநாதபுரம் நிக்கோலஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நேரு யுவகேந்திரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வட்டார அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம புற மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர் ஒற்றை கம்பு,இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞர் வசந்தி,பொருளாதார குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் நந்தக்குமார்,சுபாஷ் சீனிவாசன், சார்பு ஆய்வாளர் சாலமொன்,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இப்போட்டியினை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் ஏற்பாடு செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.