ராமநாதபுரம்,நவ.11:-
ராமநாதபுரம் வட்டம், மண்டபம் உள்வட்டம், மண்டபம் காவல் நிலையம், காவல் ஆய்வாளரால் கடந்த 04.08.2024 அன்று 17.30 மணிக்கு மண்டபம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட 1290 கிலோ உரிமை கோரப்படாத சமையல் மஞ்சள் மூடைகளை பொது ஏலம் எடுக்கும் பொருட்டு 15.11.2024 அன்று மாலை 5.00 மணிக்கு ராமநாதபுரம் தாசில்தார் தலைமையில் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது என ராமநாதபுரம் தாசில்தார் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.