இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு அதிகமான இரத்ததானங்களை செய்த தன்னார்வ தொன்று நிறுவனங்களை கௌரவிக்கும் விதமாக விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக இந்த விருதுகளை பெற்று வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக இரத்தக் கொடையாளர்களை வழங்கிவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை மாவட்ட துணைத்தலைவர் யாசர்அரஃபாத்,மாவட்ட துணைச்செயலாளர் நசுருதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.