ராமநாதபுரம்,நவ.3:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் பருவமழை துவங்கியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. ராமநாதபுரம், உச்சிப்புளி, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும்.
ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் திருப்பாலைக்குடி பகுதியில் 2 வயது சிறுமிக்கும், வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் இருவரும் மதுரை, ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.