ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையில்( எஸ்.எஸ்) பிரிவில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் வேண்டி கீழ்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அலுவலகப் பணியாளர்கள், கணினி இயக்குநர்கள். கணக்காளர்கள், சிறப்பாசிரியர்கள்(ஐ.ஈ) மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 2024 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வழிவகை செய்யவும்
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (ஐ.எப்.ஹஜ். ஆர் எம்.எஸ்)-முறையில் சம்பளம் வழங்க வழிவகை செய்யவும் இனிவரும் காலங்களில் மாத ஊதியத்தை மாத்தின் கடைசி வேலை நாளில் வழங்குவதை உறுதி செய்ய கேட்டுக்கொண்டனர்.
முடிவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.