இராமநாதபுரம் செப்.01:-
சென்ரல் இராமநாதபுரம் ஹோமர் கிளப் 7-ம் ஆண்டு பரிசளிப்பு விழா இராமநாதபுரம் அம்மா பூங்கா அருகே தனியார் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவினை சென்னை ஏஎம்எச்சி தலைவர் தன்சிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.இதற்கு முன்பு 165கி.மீ தொடங்கி 1500கி.மீ வரை புறா பந்தயம் நடைபெற்றது.அதில் 1000கி மீ பந்தய தூரத்தினை பறந்து முதல் பரிசாக ரவி என்பவரின் புறாவும் 1500கி.மீ பந்தய தூரத்தினை பாலமுருகன் என்பவரின் புறாவும் முதல் பரிசைப் பெற்றது. ஒட்டுமொத்த சாம்பியன் ரன்னர் அப் கப்பை பால முருகனும் பெற்றுக் கொண்டனர், செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார். இதில் தலைவர், பொருளாளர் அனைத்து உறுப்பினர்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.