இராமநாதபுரம் த.மு.மு.க ஐசியு ஆம்புலன்ஸ்க்கு சுமார் 1,50,000/- மதிப்பிலான இருதய மறு செயல் கொடுக்க பயன்படும் (DEFIBRILLATOR ) பெப்ரிலேட்டர் மற்றும் சிரிஞ்ச் பம்ப் கீழக்கரை த.மு.மு.க மூலம் அர்ப்பணிப்பு செய்யும் நிகழ்ச்சி கீழக்கரை அல் அக்ஸா ஜும்ஆ பள்ளியில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ம.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் கீழை பாதுஷா,தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் கீழை முஜிபுரஹ்மான்,மற்றும மாவட்ட மாவட்டத் தலைவர் பிரீமியர் இப்ராஹிம்,செயலாளர் அப்துல் ரஹீம் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகீர் பாபு,மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான் மற்றும் கீழக்கரை நகர் பொறுப்பு குழு தலைவர் முஹம்மது ஜமீல் உசேன் மற்றும் நிர்வாகிகள் புகாரி, ஹாஜா,நஃபீல்,கலீல் ரகுமான்,முஹம்மது சகில்,முஹம்மது அஸ்பதின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.