ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பாக சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் பாதுஷா நூருல் ஷமது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக் குழு உறுப்பினர்,கவுன்சிலர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் (எ)கோபால்,எலும்பு முறிவு அரசு மருத்துவர் கண்ணன் ராமபாண்டியன்,கவுன்சிலர் மணி,சமூக ஆர்வலர் பொன் பெரியார்,தாய்ப்பாசம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பாதுஷா மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளர் மருத்துவக் கல்லூரியின் நிலைய மருத்துவ அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.