நடு ரோட்டில் வியாபாரியை தத்தளிக்க விட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற மோசடி கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த கோவை தனிப்படை காவல்துறை!நடந்தது என்ன!?

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா,முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல,கோவையில் ஒரு கும்பல் மோசடி வேலையை நடத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் ஹரிசங்கர் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். தங்கம் விற்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்,அவரது செல்போனில் தொடர்பு கொண்டு என் பெயர்
சந்திரசேகர் என அறிமுகப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசியபோது முதலில் அன்பாக, பணிவாக பேசியவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து அதிகமான பணம் என்னிடம் இருப்பதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தங்க கட்டிகளாக வாங்கலாம் என்று கருதுகிறேன் எனவே உங்களிடம் தங்க கட்டிகள் இருப்பதை அறிந்தேன் அதனை நீங்கள் விற்பதாக இருந்தால் தங்கத்தை என்னிடம் தாருங்கள் நான் அதிகமான விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று சந்திரசேகரன் ஆசை வார்த்தைகளை கூறியதை உண்மை என்று நம்பிய ஹரிசங்கர் நீங்க விரும்பும் தங்கத்தை கொடுத்தவுடன் உடனடியாக பணத்தை தரவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு சரி என கூறிய நபரிடம் ஹரிசங்கர் தன்னிடம் ஒருகிலோ தங்கம் கட்டியாக இருப்பதாகவும் அதற்கான பணத்தை சொன்னது போல் அதிகமாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.அதற்கு சரி என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.
மீனு தூண்டிலில் சிக்கி விட்டது என புரிந்து கொண்ட திருட்டு மோசடி கும்பல்,தங்க கட்டிய எடுத்துக்கொண்டு கோவை சூலூர் வந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். அதிகம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு பஸ் ஏரி கடந்த செப் 11-ம் தேதி சூலூர் வந்து இறங்கியவுடன்
சந்திரசேகர் என்ற நபருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு 1 கிலோ தங்க கட்டிகளுடன் வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.


அதற்கு சரி சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வாருங்கள் என போனில் ஹரிசங்கரை அழைத்துள்ளார்.
ஹரிசங்கர் ஒரு கிலோ தங்க கட்டிகளுடன் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்ததும்
சந்திரசேகரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சந்திரசேகரன் ஹரிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னுடைய மேனேஜர் ராஜ்குமார் என்பவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.சரி என்றவர் அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் சொன்ன இடத்தில் காத்து இருந்த போது ராஜ்குமார் என்பவர் தன்னை சந்திரசேகர் அனுப்பி வைத்தார் என அறிமுகபடுத்தி ஹரிசங்கரிடமிருந்த ஒரு கிலோ தங்க கட்டிகளை வாங்கி கொண்டுள்ளார்.பிறகு தனது வாகனம் பழுதாகி விட்டதாகவும் அதனை சரி செய்துவிட்டு தான் பின்னால் வருவதாக கூறி ஹரிசங்கரை பஸ்ஸில் ஏற்றி விட்டு லட்சுமி மில் பஸ் ஸ்டாப் பகுதியில் இறங்கிய பிறகு தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.பிறகு ஹரிசங்கர் லட்சுமி மில் பஸ் ஸடாப்க்கு வந்த பிறகு ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.இதனை கண்டு அதிர்ந்த ஹரிசங்கர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்தவர்,தங்ககட்டியை தன்னிடம் வாங்கிய இடமான சூலூரில் வந்து அக்கம்,பக்கத்தில் விசாரித்து உள்ளனர்.

அங்கு எவருக்கும் தெரியாத நிலையில் அருகே உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் நிலையத்தில் முத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கார்த்திகேயனிடம் தகவலை தெரிவித்துள்ளனர்.ஒரு கிலோ தங்கம் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவின் பேரில் உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு தலைமறைவான குற்றவாளிகளை குறித்த அடையாளங்களை சேகரித்து கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே சம்பவம் நடந்த பகுதி,சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடனும் மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் டவர் எங்கு காண்பிக்கிறது என என தெரிந்து கொண்டு தேடுதலில் ஈடுபட்டனர்.இந்த தீவிர தேடுதல் விசாரணை மேற்கொண்டதில்
மோசடி கும்பல் பதுங்கி இருந்த இருப்பிடத்தை கண்டு பிடித்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கைது கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். விசாரணையில்
தங்க கட்டிகளை வாங்குவதாக மோசடியில் ஈடுபட்டவர்கள்,ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணி மகன் பாபு (வ53) ,மயிலரசன் மகன் நவீன் குமார் (வ25),செல்வராஜ் மகன் பிரபு (வ25) என்றும் இவர்களுடன் 16 வயது சிறுவனும் இருந்துள்ளது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிறுவன் உட்பட நான்கு நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்,நீதிபதி உத்தரவுபடி இக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கும்,மற்ற மூவரை கோவை மத்திய சிறைச்சாலையிலும் அடைத்தனர். அதிக விலைக்கு தங்க கட்டிகளை வாங்கிக் கொள்வதாக நூதன முறையில் மோசடி செய்து ஏமாற்றிய மோசடி வழிப்பறி கும்பலை,துரிதமாக செயல்பட்டு,சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த தனிப்படை காவல்துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்,
அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு ஏமாறுபவன் இருக்கும் வரை,புதுப்புது யுக்தியை பயன்படுத்தி ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பான். என்பதுதான் நிதர்சனம்!
எது எப்படியோ அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஆசை வார்த்தை கூறினால் அதை நம்ப வேண்டாம் என காவல்துறை சைபர் கிரைம் எச்சரிப்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே சைபர் கிரைம் காவல்துறையின் வேண்டுகோளாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *