ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பெரும்நிலக்கிழார் முஹம்மது ஷெரீப் மகனும்,திருச்சிராப்பள்ளி மொத்த காலணி வியாபார சங்க செயலாளர்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் தொழிலதிபர் திப்புசுல்தான் இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரது உடல் திருச்சியிலிருந்து சொந்த ஊரான புதுமடம் கொண்டு வரப்பட்டு இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட தொழிலதிபர்கள்,வணிகர்கள்,அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.