ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் லதா ரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி,ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரியாஸ் கான்,துணைத் தலைவர் பாத்திமா,தி.மு.க கிளை செயலாளர் அன்சார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 2024- 2025 கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 110 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் முகமது களஞ்சியம், சுபகானுல்லா,அமீர், ஹாரிஸ்,செய்யது இபுராம்சா,ஆசிரியர்கள் கோபால் சாமி,ராம் பிரகாஷ்,கவுசிக்,பாக்கிய லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்,நல்லாசிரியர் முத்துக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.