தேனி: ரயில்வே மேம்பாலப் பணிகளால் தேனியில் அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம் ஆக.4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரண்மனைபுதூர் விலக்கு அருகே ரூ.98 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜூலை 19 முதல் 28 வரை அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம் ஆக.4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.