ராமநாதபுரம்,ஜீலை.28:-
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் மாநில துணைத்தலைவர் வாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க நிறுவன தலைவர் பி.டி.அரசக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனியார் பள்ளிகள் பற்றிய அரசின் நிலைப்பாடு மற்றும் பள்ளிகளின் தேவைகள் பற்றி தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் ஆசிரியர்கள் மத்தியில் விளக்க பேருரையாற்றினார்.இதில் முஹம்மது தஸ்தகீர் மேல் நிலை பள்ளி முதல்வர் சேகர்,பி எட் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம்,மாநில ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி காவிய ஜனனி மற்றும் 12 ம் வகுப்பு மாணவி மனிஷா ஆகிய இருவருக்கும் அய்பியா AIPEIA கல்வி விருது வழங்கப்பட்டது.
இதில் தனியார் பள்ளிகளை முதன்முறையாக பள்ளிக்கல்வித்துறை பாராட்டும் விதமாக ஆகஸ்ட் 4 ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவிற்கு நன்றி அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றுதல்,தீர்மான நகல் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிகளின் பட்டியல் தனியார் பள்ளி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பிவைத்தல்.எதிர்வரும் காலங்களில் 100% தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ,ICSE பள்ளிகளுக்கும் இந்த வாய்ப்பை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க மாநில,மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.