அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பாரதி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் நகர் செயலாளர் பொறியாளர் என்.ஆர்.பால்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா அனைவரையும் வரவேற்றார்.வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கருணாகரன்,மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி,மாவட்ட மகளிரணி இணை செயலாளர் நாகஜோதி,மண்டபம் ஒன்றிய மகளிரணி செயலாளர் சக்தி,எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா,பட்டணம்காத்தான் ஊராட்சி துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் ராஜேந்திரன்,ஜெயபால், மண்டபம் ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராமமூர்த்தி,ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் குமார்,மாவட்ட விவசாய அணி சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
போலீசாரின் எதிர்ப்பை மீறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உருவபொம்மையை அ.தி.மு.க-வினர் எரித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.