ராமநாதபுரம் மத்திய மாவட்ட த.மு.மு.க சார்பில் 30-ம் ஆண்டு கொடியேற்றம்-நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது!!!

ராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக  சார்பாக தமுமுக 30-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  மாநில துணை பொது செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான் ஆலோசனைப்படி,மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம் மாவட்ட அலுவலகத்தில் த.மு.மு.க கொடியை ஏற்றி வைத்து ரூபாய் 31,000 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வாலாந்தரவை கிராமத்தில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றிய (ம) முதியோர் காப்பகத்தில்  உள்ள 65 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.சின்னக்கடை பகுதியில் உள்ள பெண்ணுக்கு திருமண உதவியாக ரூ.5,000 ஆயிரம்,மண்டபம் பகுதியைச் சார்ந்த இரண்டு ஆண்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.16,000 ஆயிரம்,மண்டபம் பகுதியைச் சார்ந்த மாணவருக்கு 2-ம் ஆண்டு கல்வி உதவியாக ரூ.10,000 ஆயிரம் என மொத்தம் 31,000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது,எஸ்.எம்.ஐ மண்டல செயலாளர் அப்துல் வாஜித்,எஸ்.எம்.ஐ மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான்,மருத்துவ அணி செயலாளர் தாஜுதீன்,மருத்துவ அணி மண்டல பொறுப்பாளர் சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் தலைவர் ஜாஹிர் பாபு,நகர் செயலாளர் முகம்மது தமீம்,நகர் பொருளாளர் மைதீன் கனி,ம.ம.க நகர் செயலாளர் செய்யது அக்பர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *