ஆசிரியை கொலையை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர்!!!

ராமநாதபுரம்,நவ.21:-

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு சென்றனர்

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-

கடந்த சில வருடங்களாக பள்ளி ஆசிரியர்களை பள்ளி வளாகத்தில் வைத்தே தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.பள்ளியில் கற்றல்-கற்பித்தல் பணிசெய்து வரும்  ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுவதற்காக அவர்களை கண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால்,இதை பொறுத்துக்கொள்ள முடியாத சில பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது காவல்துறையில் புகார் செய்து ஆசிரியர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து வருவது வாடிக்கையாக உள்ளது.இச்செயல் ஆசிரியர்கள் மத்தியில் மிருந்த வருத்தத்தை ஏற்படுத்தி வருககிறது. இதனால் ஆசிரியர்களால் சுதந்திரமாக பணி செய்ய முடியவில்லை.மேலும் கற்றல்-கற்பித்தல் பணியை முழுமையாக செய்வதில் தொய்வும் ஏற்படுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் தாக்கப்பட்டு வருவதால், ஆசிரியர்கள் ஒருவித அச்சத்துடன் பள்ளியில் பணிசெய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணி செய்து வந்த ரமணி என்ற பெண் ஆசிராயரை, இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆசிரியர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலங்களில் இந்த மாதிரியான சம்பவம் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ்தாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்பாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும்ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் தியாகராஜன் அறிவுரையின்படி மல்லிப்பட்டிணம் ஆசிரியையின் படுகொலையை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்தக்கோரியும் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பள்ளிக்குச் சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *