கீழக்கரை,நவ.18:-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அ.தி.மு.க செயலாளர் எம்.எஸ்.ஜகுபர் உசேன் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வீரகுல தமிழர் படை நிறுவனர் கீழை பிரபாகரன் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சமூக விரோதிகள் 16/11/2024 அன்று கீழை பிரபாகரனை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.இத்தாக்குதலுக்கு கீழக்கரை நகர் அ.தி.மு.க சார்பில் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சமூக ஆர்வலர் கீழை பிரபாகரனை தாக்கிய சமூக விரோதிகளை கண்டறிந்து கீழக்கரை காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அது மட்டுமில்லாமல் இனி வரக்கூடிய காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கீழக்கரை நகர் அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.