ராமநாதபுரம் புதிய பஸ், நிலையம் அருகில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி த.மு.மு.க சார்பில் மின்சார வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட மின்சார வாரியம் மேற்பார்வையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
மனுவில் அவர்கள் கூறியதாவது:-
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் நுழைவுவாயில் பகுதியில் பிரதான சாலை செல்கிறது. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது பகுதியில் தினந்தோறும் நடக்கும் மார்க்கெட்,அம்மா உணவகம்,நகராட்சி பெண்கள் பள்ளி என நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.
இதுபோன்று தினமும் அதிகாலை நேரம் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 100-க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் பஸ் நிலையம் நுழைவுப் பகுதியில் சாய்ந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பி செல்லும் மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.இதற்கு துணையாக சாதாரண கம்புகளை கட்டி முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்தால் இந்த மின்கம்பம் சாய்ந்து மின்கம்பி அறுந்து விழும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.