மல்லர் கம்பம் விளையாட்டில் ராமநாதபுரம் மாணவர்கள் உலக சாதனை!

பனைக்குளம்,ஆக.6:

தமிழ்நாட்டின் மல்லர் கம்பம் தந்தை என அழைக்கப்படும் உலகு துரையின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் சார்பில் உலக வரலாற்றில் முதன்முறையாக 100 மல்லர் கம்பத்தில் 1000 மாணவர்கள் 15 நிமிடங்கள் நிற்காமல் மல்லர் கம்பம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. 

25 மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாணவர்கள் லத்திகா, கனிஷ்கா,ஜனனி ஶ்ரீ, ரோஷினி,தருண்,ஜஹாஸ்டியன்,ஶ்ரீ ஹர்சன்,ஹரிஸ் யோக தர்ஷன், திருமுருகன்,முகேஷ்வரன் ஆகியோர் மல்லர் கம்பத்தில் உலக சாதனை செய்து அசத்தினர்.இதனை இன்ஜெனியஸ் சார்ம் வோல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினர்.உலக சாதனை செய்த மாணவர்களை ராமநாதபுரம் மாவட்டம் மால்கம் கழக தலைவர் பாஸித் மற்றும் செயலாளர் மேத்யு இம்மானுவேல் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *