ராமநாதபுரத்தில் தி.மு.க  செயல்வீரர்கள் கூட்டம்-காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம்,அக்.23:-

ராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 24.10.2024 வியாழன்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் ராமநாதபுரம், பாரதி நகர்,பீமாஸ் வைஸ்ராய் மகாலில், மாவட்ட அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி  தலைமையில் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், கழக தேர்தல் பணிக் குழு தலைவர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச செயலாளர் கொடி சந்திரசேகர் (பரமக்குடி தொகுதி பார்வையாளர்), மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் தஅருண் (திருவாடனை தொகுதி பார்வையாளர்), புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் சுதர்சன் (இராமநாதபுரம் தொகுதி பார்வையாளர்), விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் (முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளர்) ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

கூட்டத்தில்  பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்பது, 2. மாண்புமிகு துணை முதல்வர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டம், 

வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம். மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள் (BLA2), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC) மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *